search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிமுன் அன்சாரி"

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #LSPolls #DMK #Congress
    சென்னை:

    மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து தமிமுன் அன்சாரி தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மனித நேய ஜனநாயக கட்சியின் 6-வது தலைமை செயற்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது. அவைத் தலைவர் நாசர் உமர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஹாரூன் ரஷீது மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தலில் பாசிசம் ஒழிக்கப்பட்டு சமூக நீதி நிலைநாட்டப்பட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு இந்திய மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.முக., முஸ்லிக் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

    சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும். பாலியல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    28 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டவர்களையும், கோவை அபுதாகீர், திண்டுக்கல் மீரான் மைதீன் போன்றவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #LSPolls #DMK #Congress
    கேரள வெள்ள நிவாரண நிதிக்கு மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார். #KeralaFloods
    சென்னை:

    கேரள வெள்ள நிவாரண நிதிக்கு மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கட்சியினரின் அறிவுறுத்தலின் பேரில், எனது ஒரு மாத சம்பளத்தை வழங்கி இருக்கிறேன். நாகப்பட்டினம் தொகுதி மக்கள் தங்களது நிவாரண உதவிகளை நாகை எம்.எல்.ஏ. அலுவலக்தில் வழங்கலாம். அப்படி பெறப்படும் பொருட்கள் ரெயில் மூலம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KeralaFloods

    சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று திருப்பூரில் மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். #ChennaiCorporation #ThamimunAnsari
    திருப்பூர்:

    மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது -

    தமிழகத்தில் உள்ளாட்சி துறைகளில் சொத்துவரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் சாமானியர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

    மத்திய பா.ஜனதா அரசு அனைத்து துறையிலும் தோல்வி அடைந்துஉள்ளது. ஜி.எஸ்.டியால் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பும், எதிர்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது. மலேசியாவில் ஜி.எஸ்.டியை திரும்ப பெற்று விட்டனர். இந்தியாவில் ஜி.எஸ்.டியை முதல் கட்டமாக 10 சதவீதத்துக்கு கீழ் கொண்டு வரவேண்டும்.

    திருப்பூரில் ஜி.எஸ்.டி.யால் பின்னலாடை தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இங்குள்ள உற்பத்தியாளர்கள் பங்களாதேசுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். எனவே பனியன் உற்பத்திக்கு 5 சதவீதத்துக்கு கீழ் ஜி.எஸ்.டி .வரியை கொண்டு வரவேண்டும். கோடம்பாக்கத்தில் இருந்து முதல்வர்கள் மற்றும் அரசியல் வாதிகளை கண்டறிந்த காலம் முடிந்து விட்டது. சினமா துறையில் அரசியலுக்கு வருபவர்கள் நிலைக்க முடியாது.


    ஜெயலலிதா உயிரோடு இருந்து இருந்தால் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டு எடுப்புக்கு வாக்களித்து இருக்க மாட்டார்கள். அ.தி.மு.க. எம்.பி.க்கள் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்து இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChennaiCorporation  #ThamimunAnsari
    எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாக மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். #ThamimunAnsari #EdappadiPalanisamy
    சென்னை:

    மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கடந்த 9-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

    அப்போது பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் தமிமுன் அன்சாரி விவாதித்துள்ளார். இதுகுறித்து அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    ரமலான் நோன்பு தொடங்குவதற்குள் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் நோன்பு கஞ்சி அரிசி வழங்க வேண்டும் என்று முதல்- அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன்.

    இந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக அனைத்து பள்ளிவாசல்களுக்கும் தேவையான அரிசிகளை வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்தேன்.

    நான் முதல்-அமைச்சரிடம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. ஏனென்றால் நான் எடப்பாடி பழனிசாமி பக்கமும் இல்லை, தினகரன் பக்கமும் இல்லை. இரு கட்சியிலும் இருந்து சமதூரத்தில் விலகி இருக்கிறேன். இருவரின் அரசியல் மீது விமர்சனம் உண்டு. என் கட்சி வழி காட்டுதல்படி நான் தனித்தே செயல்படுகிறேன்.

    காவிரி பிரச்சனை, நீட்தேர்வு, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி போன்றவற்றில் தனித்து போராடுகிறோம்.

    எடப்பாடி பழனிசாமி அரசு மீது எங்களுக்கு விமர்சனம் இருந்தாலும் மக்கள் பிரச்சனைக்கு பார்க்க வேண்டும் என்றால் உடனே நேரம் ஒதுக்கி தருகிறார். ஆனாலும் அவரது அரசியல் நிலைப்பாட்டில் எங்களுக்கு விமர்சனம் உண்டு.

    இதைபோல் தினகரன் மீது மரியாதை இருந்தாலும் பிரதமருக்கு எதிராக கருப்புகொடி போராட்டம் வேண்டாம் என்று அறிவித்தது அரசியலில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் பிரிந்த சமயத்தில் தனியரசு, கருணாஸ், நான் ஆகிய 3 பேரும் சமரசம் செய்ய முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. அதனால் நாங்கள் விலகி நிற்கிறோம்.


    அ.தி.மு.க. ஆட்சிக்கு பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது.

    எடப்பாடி பழனிசாமி அரசை அகற்றினால் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய பாரதிய ஜனதா அரசு செயல்படுகிறது.

    எடப்பாடி ஆட்சிக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர். அதனால் தான் அ.தி.மு.க. ஆட்சியின் குரல்வளையை நெரிக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தல் வரை அ.தி.மு.க. ஆட்சிக்கு சிக்கல் இருக்காது. அதன்பிறகு நிலைமை மாறலாம்.

    பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்.

    இவ்வாறு தமிமுன் அன்சாரி கூறினார். #ManithaneyaMakkalJananayakaKatchi #ThamimunAnsari #EdappadiPalanisamy
    ×